
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தனது இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் களைகட்டின.
சென்னையில் பல்வேறு இடங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
மேலும் புத்தாண்டையொட்டி, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனிடையே ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர், பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்டாரும் தங்களது வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.