சலார் ஓடிடியில் எப்போது?
சலார் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சலார் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இப்படம் முதல்நாளில் உலகளவில் ரூ.178.7 கோடி வசூலித்து 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே முதல்நாள் வசூலில் முதலிடம் பெற்று அசத்தியது. இப்படம் இதுவரை ரூ.500 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையும் படிக்க: ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில்!
இந்த நிலையில், சலார் திரைப்படம் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...