தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காதலியை கரம்பிடித்த சின்னத்திரை நடிகர்!

சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :2 ஜனவரி 2024, 12:17 pm

DIN


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி சி/ஓ ராணி தொடரில் நடித்துவரும் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம் தனது நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்தார். 

சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்ற அவரின் திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் அர்ஜுனுக்கு அவரின் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

(மனைவி) காதலியுடன் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம்

(மனைவி) காதலியுடன் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி சி/ஓ ராணி தொடரில் சூரியா பாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல நட்சத்திர நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். 

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தாயம்மா உள்ளிட்ட தொடர்களிலும் அர்ஜுன் ஆறுமுகம் நடித்துள்ளார். 

Story image

இதனிடையே தனது நீண்ட நாள் காதலியை பெற்றோர் சம்மதத்துடன் நடிகர் அர்ஜுன் கரம் பிடித்துள்ளார். மேலும், திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அர்ஜுன், புதிய தொடக்கம். அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பதாக உறுதியளிக்கிறேன். அதிகாரப்பூர்வமாக நாங்கள் இணைந்துவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் இணைந்து அனுபவிக்க தயாராகியுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்த பதிவுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.