17லிருந்து 45 வயதுவரை சினிமாவில் நீடிக்க காரணம் இதுதான் : ராணி முகர்ஜி பெருமிதம்!

பிரபல ஹிந்தி நடிகை ராணி முகர்ஜி தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசியுள்ளார். 
17லிருந்து 45 வயதுவரை சினிமாவில் நீடிக்க காரணம் இதுதான் : ராணி முகர்ஜி பெருமிதம்!

1996இல் பெங்காலி படத்தில் அறிமுகமானவர் ராணி முகர்ஜி. ஷாருக்கானுடன் நடித்த குச் குச் ஹோத்தா ஹே படம் மிகவும் பிரபலமானது. தமிழில் 'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானார்.

ஹிந்தியில் அதிக படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். உடற்பயிற்சி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சில நடிகைகளில் ராணி முகர்ஜியும் ஒருவர். 

பான் இந்தியா இயக்குநர்கள் உரையாடல்களில் பங்குபெற்ற நடிகை ராணி முகர்ஜி, “வெளிநாட்டு படங்களைவிட இந்தியாவில் எல்லா வகையான படங்களையும் எடுக்கிறார்கள். 17 வயதில் இருந்து நடிக்கிறேன். தற்போது 45 வயது ஆகிறது. இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். 

திருமணம் ஆனாலே நடிகைகள் நடிப்பதில்லை. அவர்களுக்கான மார்க்கெட் காணாமல் போகிறது. ஆனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பினை வழங்கினால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனது ரசிகர்கள்தான் என்னை இதுவரை நடிக்க அனுமதி வழங்கி வருகிறார்கள். அவர்களது ஊக்கமும் பாராட்டும்தான் என்னை இன்னும் சிறப்பான படங்கள் எடுக்க உதவுகிறது” எனக் கூறியுள்ளார். 

கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ரானி முகர்ஜியின் மிர்சஸ். சட்டர்ஜி வெஸ்ஸஸ் நார்வே படம் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com