எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அட்லியை அதிகமாக கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் புகழாரம்!

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அட்லியை புகழ்ந்து பேசியுள்ள விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். 

Story image

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறியிருந்தார். நடிகர் விஜய், நடிகர் ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். 

Story image

ராஜா ராணி படத்தில் இருந்து கடைசியாக வெளியான ஜவான் படம் வரை அட்லி பல படங்களை  காப்பியடித்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் சட்ட ரீதியாக எதுவும் நிரூபணமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன், “நாம் அட்லியை கொண்டாட வேண்டும். இங்கிருந்து பாலிவுட் சென்று 1200 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு படமெடுப்பது சாதாரண விஷயமல்ல. அங்கிருப்பவர்களாலே அதை செய்ய முடியவில்லை. அதனால்தான் இங்கிருந்து அவர் செல்கிறார். அவரை எளிமையாக விமர்சிக்கிறார்கள். இதே மாதிரி வேறொரு மொழியில் யாராவது இருந்தால் அங்கிருக்கும் மக்கள் அந்த இயக்குநரை பாராட்டுவார்கள். ஆனால் இங்கு அது நடப்பதில்லை. மாறாக அவதூறுகளை வீசுகிறார்கள். அட்லி இன்னும் கொண்டாடப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்களுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.