காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கேப்டன் மில்லர் விழாவில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்!

தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் ரசிகர் ஒருவர் தொகுப்பாளினியிடம் தவறாக நடந்தகொண்டததற்காக தாக்கப்பட்டிருக்கிறார்.

News image
Updated On :4 ஜனவரி 2024, 6:07 am

DIN


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லரின்  முன் வெளியீட்டு விழா நேற்று (ஜன.3) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரசிகர் ஒருவர் அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஐஸ்வர்யா என்பவரிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. உடனே, ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்ததுடன் சில அடிகளையும் கொடுத்தார். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, இந்தக் கானொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகர் கூல் சுரேஷ், நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு  மாலையை அணிவித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.