அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லரின் முன் வெளியீட்டு விழா நேற்று (ஜன.3) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் விழாவில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்!
நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ், “ சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள், 2002-ஆம் ஆண்டிலிருந்து நான் சேர்த்த சிறு துளியான ரசிகர்கள்தான் இன்று பெரு வெள்ளமாக மாறியிருக்கிறார்கள். கேப்டன் மில்லர் திரைப்படத்தைப் பற்றி நினைக்கும்போது உழைப்புதான் தெரிகிறது. அசுரத்தனமான உழைப்பைப் படக்குழு கொடுத்திருக்கிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரனைப் பார்க்கும் போதெல்லாம் இயக்குநர் வெற்றிமாறன் ஞாபகத்திற்கு வருகிறார். 15 நிமிடத்தில் கேப்டன் மில்லர் படத்தின் கதையைச் சொன்னார். என்ன சொன்னாரோ அதையே சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கிறார். கேப்டன் மில்லரின் இறுதி 30 நிமிடங்கள் பயங்கரமாக இருக்கும். வட சென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும்.” எனக் கூறினார். மேலும், நடிகர் விஜய்காந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராசாத்தி உன்னைக் காணாது நெஞ்சு’ பாடலை மேடையில் பாடி அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தும் இந்தியாவின் திட்டம்; விவரிக்கும் புஜாரா!

தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!

ஈரான் - இஸ்ரேல் போர்! வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்கும் இத்தாலி!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

