பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப் பிரபலமான போட்டியாளர் யார்?

மும்பையைச் சேர்ந்த ஓர்மேக்ஸ் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப் பிரபலமான போட்டியாளர் யார்?
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த ஓர்மேக்ஸ் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதில் 5வது இடத்தில் தினேஷ் கோபால்சாமி உள்ளார். இவர், சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகான்  தொடரில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல தொடர்களில் பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம், புதுக்கவிதை உள்ளிட்ட தொடர்களில் கவனம் பெற்றவை.

4வது இடத்தில் விசித்ரா. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாள்கள் இருந்த மூத்த நடிகர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். (இதுவரை வந்த மூத்த நடிகர்கள் யாரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாள்கள் இருந்ததில்லை)

3வது இடத்தில் மாயா கிருஷ்ணன். இவர் மேடை நாடகக் கலைஞர். வானவில் வாழ்க்கை என்ற படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தொடரி, துருவநட்சத்திரம், மகளிர் மட்டும், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் துணை பாத்திரங்களில் நடித்துள்ளார்.

2வது இடத்தில் விஷ்ணு விஜய். இவர் சின்னத்திரை நடிகராக மக்களிடம் பிரபலமானவர்.   விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள்-கல்லூரியின் கதை, ஆபிஸ் ஆகிய தொடர்கள் மூலம் மக்களைக் கவர்ந்தவர். அதனைத் தொடர்ந்து சத்யா சீசன் 1, சத்யா சீசன் 2, சொல்ல மறந்த கதை உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார். 

முதலிடத்தில் அர்ச்சனா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ராஜா ராணி தொடரில் ஆல்யா மானசாவுடன் இணைந்து நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். 

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்துள்ளார். அதிகமுறை எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இருந்தாலும் பலமுறை மக்கள் வாக்குகள் மூலம்  காப்பாற்றப்பட்டுள்ளார். 

தற்போது பிக்பாஸ் -7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com