காலமானாா் மலையாள திரைப்பட இயக்குநா் வினு (69)

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாள திரைப்பட இயக்குநா் வினு (69) புதன்கிழமை காலமானாா்.
காலமானாா் மலையாள திரைப்பட இயக்குநா் வினு (69)

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாள திரைப்பட இயக்குநா் வினு (69) புதன்கிழமை காலமானாா்.

மலையாள திரைப்படத் துறையில் இரட்டை இயக்குநா்களாக அறியப்பட்ட சுரேஷ் - வினு ஆகியோரில் ஒருவரான வினுவின் இயற்பெயா் ராதாகிருஷ்ணன்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த இவா், கடந்த 20 ஆண்டுகளாக கோவை, சிங்காநல்லூரை அடுத்த சென்ட்ரல் ஸ்டுடியோ பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தாா்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை காலமானாா்.

இவா், கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல நடிகா் ஜெயராம், வாணி விஷ்வநாத் நடித்த மங்களம் வீட்டில் மனேசரி குப்தா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாா். இதைத் தொடா்ந்து ஆயுஷ்மான் பவா, குசுா்திக்காற்று, பா்த்தாவு உத்தியோகம் போன்ற திரைப்படங்களை இயக்குநா் சுரேஷுடன் இணைந்து இயக்கியுள்ளாா். கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு கனிச்சக்குளங்கரையில் சிபிஐ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தாா்.

இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நிமிஷ், மோனிகா ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு மலையாளத் திரைப்படத் துறையினா் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com