கங்குவா படப்பிடிப்பை முடித்த நடிகர் சூர்யா!
கங்குவா படத்தின் படப்பிடிப்பினை நடிகர் சூர்யா நிறைவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடிக்கின்றனர்.
அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்!
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: வைரலாகும் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம்!
இன்னும் சில நாள்களில் முழுமையாக கங்குவா படப்பிடிப்பு நிறைவு செய்யப்படுமென எதிர்பார்த்த நிலையில் நடிகர் சூர்யா தனது படப்பினை நிறைவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யா, “கங்குவா படத்துக்கான எனது கடைசி நாள் படப்பினை முடித்துவிட்டேன். படக்குழு முழுவதும் நேர்மறையான எண்ணங்களுடன் மூழ்கியுள்ளன. இது ஒன்றின் நிறைவு, பலவற்றின் ஆரம்பம். அனைத்து நினைவுகளுக்கும் இயக்குநர் சிவா, படக்குழுவுக்கு நன்றி. கங்குவா மிகப்பெரிய, சிறப்பான படம். திரையில் நீங்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். குடும்பத்தை மிஸ் செய்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...