தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த அக்.26இல் தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர்.

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிக்க: ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப்படம்: அயலான் இயக்குநர் ரவிக்குமார்
இந்நிலையில் ஒரு விடியோவினை வெளியிட்டு அதில், “மாற்றத்துக்காக பயப்படாதீர்கள். டார்வின் கூறியபடி, மிகவும் வலுவான, மிகவும் புத்திசாலியான இனங்கள் எதுவும் வாழ்வதில்லை. யார் மற்றத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களே பிழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


