தொடங்கியது தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு!
நடிகர் விமல் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் படத்தில் நடித்து வருகிறார்.


சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகர் விமல் நடித்து வருகிறார். இத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
.jpg)
2013இல் எழில் இயக்கத்தில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவையில் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதயக்கனி என்ற அவரது பெயரும் சூரியின் நகைச்சுவைகளும் இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது.
வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பாக பி.ரவிசந்திரன் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்.
இதையும் படிக்க: மாற்றத்துக்காக பயப்படாதீர்கள்: அமலா பால் பகிர்ந்த புதிய விடியோ!
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...