எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அட்லி தயாரிப்பில் வருண் தவான்: பூஜை விடியோ!

இயக்குநர் அட்லி - வருண் தவான் கூட்டணி படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2024, 7:36 am

DIN

இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். 

ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக்கை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில்,  வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பின் விடியோவைப் படக்குழு பகிர்ந்துள்ளது. பிரியா அட்லி தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடிக்க உள்ளனர். காளிஸ் இயக்குகிறார். விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.