நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் 12 தெலுங்குப் படங்கள்! 

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிறகு பல பெரிய தெலுங்கு படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் 12 தெலுங்குப் படங்கள்! 
Published on
Updated on
1 min read

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிறகு பல பெரிய தெலுங்கு படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நெட்பிளிக்ஸ் 2024ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தெலுங்கு மொழி திரைப்படங்களில் 12 படங்கள்  நெட்பிளிக்ஸில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஜூனியர் என்டிஆரின் 'தேவரா', பிரபாஸ் நடித்த சலார்-1’  ஆகியவை அடங்கும்.

மேலும் இதில் பிரபல தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், நந்தமுரி பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், நானி, விஜய் தேவரகொண்டா ஆகிய நடிகர்களின் படங்கள் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

வெளிவராத படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு அனைத்து படங்களும் மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலான தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வட இந்திய மொழியான இந்தியிலும் டப் செய்யப்பட்ட பதிப்புகளில் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். 

இதைப் பற்றி பேசுகையில், "நெட்பிளிக்ஸின் எங்களின் தென்னிந்திய உள்ளடக்கப் பார்வையில் ஆண்டுக்கு ஆண்டு 50 சதவீத வளர்ச்சி தெலுங்கு திரைப்படங்களின் மூலம் வளர்ச்சியடைகிறது. இந்த ஆண்டிலும் சிறந்த படங்களை தேர்வு செய்துள்ளோம். தெலுங்கு பிளாக்பஸ்டர் சினிமா, மிகப்பெரிய நட்சத்திரங்கள், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு சினிமாவை இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என நெட்பிளிக்ஸ் இந்தியாவின் விற்பனை துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியுள்ளார். 

12 படங்களின் பட்டியல்: 

சலார்- பார்ட் 1
ஹாய் நான்னா 
புஷ்பா 2 
தேவரா
புட்டி 
கேங்ஸ் ஆஃப் கோதாவரி 
யுவி12 
நந்தமுரி பாலகிருஷ்ணா 109
மங்கோ மாஸ் 
தில்லு ஸ்கொயர் 
விஜய்தேவரகொண்டா12 
எஸ்விசிசி37

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com