நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 4 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பியே உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான் முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: ‘நான் அந்த ராமசாமி இல்லை...’ சர்ச்சையில் சந்தானம்!
இந்நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கலவையான விமர்சனங்களையே படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.