பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

ராஷ்மிகா உடன் தனக்கு நிச்சயார்த்தம் நடப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.
பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது குறித்து விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் அர்ஜுன் தேவரகொண்டா கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். 

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இந்த படங்களைத் தொடர்ந்து ராஷ்மிகா தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் ரன்பீர் கபூர் உடன் நடித்த  ‘அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி இரண்டாவது வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து இருவரும் கருத்து தெரிவிக்காத நிலையில், விஜய் தேவரகொண்டா லைப்ஸ்டைல் ஆசியாவுக்கு அளித்த நேர்காணலில் முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.

விஜய்,  “நான் பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ கல்யாணமோ செய்து கொள்ள போவதில்லை.  இது எப்படியிருக்கிறது என்றால் ஊடகங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எனக்கு கல்யாணம் ஆக விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியைக் கேட்டு வருகிறேன். அவர்கள் என்னைக் கையோடு பிடித்து கல்யாணம் செய்து வைக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி படம் வெளியானது. தற்போது அவர் பேமிலி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகாவின் நடிப்பில், ‘புஷ்பா:தி ரூல்’,‘ரெயின்போ’, ‘தி க்ரள்ப்ரெண்ட்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com