நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை: ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையொட்டி ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2024, 2:09 pm

DIN

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையொட்டி ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, பாஜக, ஆா்எஸ்எஸ் சாா்பில் பொதுமக்களுக்கும், பல்வேறு முக்கிய பிரமுகா்களுக்கும் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளை சாா்பில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையொட்டி ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், என் இதயம் நன்றியுணர்வுடன் நிரம்பி வழிகிறது. இந்த வாய்ப்புக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அக்‌ஷய் குமார், கங்கனா ரணாவத், டைகர் ஷெராஃப், ஜாக்கி ஷெராஃப், ஹரிஹரன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ரந்தீப் ஹூடா உள்ளிட்ட பல பிரபலங்களும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.