இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: விஜய் படம் என்னாச்சு? ஆர்.ஜே.பாலாஜி பதில்!
அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படம் ஜன. 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. திரையரங்கு உரிமத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிரிக்கெட் விளையாடிய பா. ரஞ்சித்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேகப் பந்து வீச்சாளர், தொடக்க வீரர் என பா. ரஞ்சித் தனது கிர்க்கெட் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் படத்துக்கு புரமோஷன் செய்யும் விதமாக இந்த விடியோ வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி, அசோக் செல்வன் ஆகியோர் இந்த விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
Sports: the essence of unity
â Neelam Productions (@officialneelam) January 24, 2024
Sportsmanship: the key to thriving in life's game!
Wishes to team #SingaporeSaloon from team #BlueStar#BlueStar - Book Your Tickets Now
https://t.co/svz6KTQf86https://t.co/czwiz1poxI #BlueStarFromTomorrow #BlueStarFromJan25@beemji⦠pic.twitter.com/2XUlI23Zgx
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



