தமிழகத்தைச் சோ்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவா்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி, விஜயகாந்துக்கும், பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக வெங்கையா நாயுடுக்கும் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விருது அறிவிப்புக்கு வார்த்தைகளே இல்லை என சிரஞ்சீவி நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டுள்ளார். தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் ராஜமௌலி, ”இந்தியாவின் மிக உயர்ந்த 2வது விருதினை பெரும் சிரஞ்சீவியின் சினிமா பயணம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமளிக்கும். பத்ம விபூஷணுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்., “வெங்கையா நாயுடு, சிரஞ்சீவி இருவருக்கும் வாழ்த்துகள். மேலும் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரவிதேஜா, “பத்மவிபூஷண் மாஸ்டர் சிரஞ்சீவி. வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


