தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெளியானது பாபி தியோலின் கங்குவா பட போஸ்டர்!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் வில்லன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:40 am

DIN

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. 

Story image

இந்நிலையில் பாபி தியோலின் பிறந்தநாளில் உதிரன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அனிமல் படத்தில் கலக்கிய பாபி தியோலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.