ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு (டீப்ஃபேக்) விடியோ அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் அளித்த புகாரின்பேரில், தில்லி சிறப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
தொடர்ந்து, ஆந்திர மாநிலம் குண்டூரை சோ்ந்த ஈமனி நவீன் (23) என்ற பி.டெக் பட்டதாரி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு விடியோவை வெளியிட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்தரித்து விடியோ பதிவிட்டதாக தெரிவித்தாா்.
இதனால் பிரச்னை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட விடியோவை சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிக்க: கங்குவா வெளியீட்டுத் தேதி!
இந்நிலையில், நவீன் ராஷ்மிகாவுக்கான ரசிகர் பக்கத்தையும் (ஃபேன் பேஜ்) நடத்தி வந்ததுள்ளார். பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தன் விருப்ப நாயகியின் முகத்தையே போலியாக சித்திரித்து ராஷ்மிகாவின் ஆபாச விடியோவை அவரது ரசிகரே உருவாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

