வலதுசாரி கொள்கைவாதியான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு ‘சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் ரந்தீப் ஹூடா ’சாவர்க்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி மற்றும் மராத்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வருகிற மார்ச 22-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார்.
ஹைவே, சர்ப்ஜித், சுல்தான் ஆகிய படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரந்தீப் ஹூடா, இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநர் அவதரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனது எக்ஸ்(டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இரு நாயகர்கள்; அவர்களில் ஒருவர் கொண்டாடப்பட்டார், மற்றொருவர் வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டார்.
2024-ஆம் ஆண்டு தியாகிகள் தினத்தன்று, வரலாறு திருப்பி எழுதப்படும். மார்ச் 22-ஆம் தேதியன்று சுவதந்த்ரிய வீர் சாவர்க்க்கர் திரையரங்குகளில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
Two heroes of Indian Independence Struggle; One celebrated and One removed from History
â Randeep Hooda (@RandeepHooda) January 30, 2024
On #MartyrsDay 2024 - HISTORY WILL BE REWRITTEN #SwatantryaVeerSavarkar IN CINEMAS ON 22nd March, 2024#VeerSavarkarOn22ndMarch#WhoKilledHisStory@RandeepHooda #AnkitaLokhande⦠pic.twitter.com/Lv2tWlzfvz
மற்றொரு பதிவில், ”இந்தியாவில் நடந்த உண்மை சம்பவம் : தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவருக்கு செலுத்தும் அஞ்சலி இது” என்று ரந்தீப் ஹூடா பதிவிட்டுள்ளார்.
Akhand Bharat - #SwatantryaVeerSavarkar 's dream, India's reality â a tribute to the visionary leader whose story was buried alive
â Randeep Hooda (@RandeepHooda) January 30, 2024
Teaser: https://t.co/c7bOgJ4cO8#VeerSavarkarOn22ndMarch#WhoKilledHisStory@RandeepHooda @apmpictures @anandpandit63 @thisissandeeps #RoopaPandit⦠pic.twitter.com/m6Dq8lmStD
இத்திரைப்படத்தை ஸீ-ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரந்தீப் ஹூடாவுடன் இணைந்து, அங்கிதா லோகாண்டே மற்றும் அமித் சியால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






