‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நித்யா மேனன்?

Published On :

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நித்யா மேனன் இணைந்துள்ளதாகத் தகவல்.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளது.

தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஏஸ்’ திரைப்படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே, அடுத்ததாக விஜய் சேதுபதி எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இதற்கிடையே, விஜய் சேதுபதியின் புதிய படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து மலையாளத்தில் 19 (1) (ஏ) என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இறுதியாக, பாண்டிராஜ் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.