யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

இவரைப் போல வாழ வேண்டும்... ஜெயிலர் 2 பட அனுபவம் பகிர்ந்த விஜய் சேதுபதி!

பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயிலர் 2 அனுபவம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பதாவது...

Rajinikanth, Vijay Sethupathi

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி - படங்கள்: சன் பிக்சர்ஸ், திங்க் மியூசிக் இந்தியா

Published On :

பத்தா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியிருப்பது கவனம் பெற்று வருகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சாய் இசையமைக்க, அட்லீ தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி புதிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது:

நான் வியந்து வியந்து பார்க்கும் மனிதர் ரஜினிகாந்த் சார். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு காட்சியில் நடிக்க சென்றிருந்தேன்.

அப்போது நானும் அவரும் பேசுவது போன்ற காட்சி அது. அதில் நெல்சன் வெத்தலை, பாக்கு, கிராம்பு போன்றவற்றை எல்லாம் தந்து தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார். ரஜினி சாருக்கு இருக்கும் அனுபவத்திற்கு அவர் இதனை ஒத்திகையில் செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், செய்து பார்க்கிறார்.

நான் பேசும்போது எவ்வளவு தூரம் போகிறது. அதற்கான நேர அளவுக்கு வெத்தலை, பாக்கு எல்லாம் எடுத்து போட்டு நேரத்தை ஒப்பிடுகிறார். இதனை ஐந்து ஆறு முறை செய்து பார்க்கிறார். நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது எல்லாமே நான் சாகும்வரை நடிகராக இருந்தால் இதுபோல் இருக்க வேண்டும். அவர் வேலையில் அவ்வளவு முனைப்புடன் இருக்கிறார். இப்போதும் சினிமாவை அவ்வளவு நேசிக்கிறார் என்றார்.

Summary

"I want to live like him..." Vijay Sethupathi shares his experience from the movie Jailer 2!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER