
நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
தற்போது, அஜர்பைஜனில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், திடீரென படப்பிடிப்பிலிருந்த அஜித் நேற்று (ஜூலை 2) சென்னை திரும்பினார். நீண்ட நாள்களுக்குப் பின் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து ஏன் அஜித் வந்தார் என்கிற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதற்காக, ஷாலினிக்கு துணையாக இருக்கவே அஜித் சென்னை திரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாலினி உடலில் என்ன பிரச்னை என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.