துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ராயன் படத்திற்கு ஏ சான்றிதழ்?

Published On :

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முன்னதாக, இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வடசென்னையை மையமாகக் கொண்டு உருவான வடசென்னை திரைப்படமும் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.