காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏ.ஆர்.ரஹ்மான் தீம் மியூசிக் இந்தியன் 2 படத்திலும் தொடருமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஷங்கர், அனிருத் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஷங்கர், அனிருத்

Published On :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் கமலுடம், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் சேனாபாதி கதாபாத்திரத்துக்கு அமைத்திருந்த தீம் மியூசிக்கை இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தியிருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஷங்கர், அனிருத் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அந்த பழைய நினைவுகள் எல்லாம் இருக்கிறது, சேனாபதியின் தீம் மியூசிக் இந்தியன் 2 படத்திலும் வரும். ரஹ்மான் அனிருத்துக்கு நன்றி” என ஷங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.