முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராயன்: காவல்துறை உளவாளியாக தனுஷ்?

Published On :

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. ராயன் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் காவல்துறை உளவாளியாக நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வடசென்னை பின்னணியில் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.