பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தொடர்ந்து நடிப்பேன்: வரலட்சுமி

நடிகை வரலட்சுமி திருமணத்திற்குப் பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

News image
Updated On :16 ஜூலை 2024, 1:28 pm IST

நடிகை வரலட்சுமி திருமணத்திற்குப் பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து காதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாருக்கு தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதனையடுத்து வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. பிரதமர் மோடி, ரஜினிகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

Story image

தொடர்ந்து, இவர்களின் திருமணமும் ஜூலை 2 ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது. அதில் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வரலட்சுமி மற்றும் நிக்கோலய் தம்பதி திருமணம் குறித்து பேசினர். அப்போது, வரலட்சுமி, “என் காதல் நிகோலய்தான். ஆனால், என் உயிர் சினிமா. அதனால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.