நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எம்.டி.வாசுதேவன் நாயர் கதைகளால் உருவான மனோரதங்கள் டிரைலர்!

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைகளிலிருந்து உருவான ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 10:37 am

DIN

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைகளிலிருந்து உருவான ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாள இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வென்றவர். இவர் எழுதிய காலம், மஞ்சு, நாலுகெட்டு உள்ளிட்ட நாவல்கள் பெரும் கவனம் பெற்றவை.

மாத்ரூபூமி வார இதழின் ஆசிரியராக இருந்தபோது இவர் எழுதிய ‘முறப்பெண்ணு’ சிறுகதையை இயக்குநர்  ஏ.வின்செண்ட் திரைக்கதையாக எழுதித் தர கேட்டார். அப்போதிலிருந்து இன்றுவரை சினிமாவில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

Story image

இலக்கியத்திலும் சினிமாவிலும் இவர் அளவிற்கு செல்வாக்குடன் இருந்த எழுத்தாளர் இல்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். எம்.டி.வாசுதேவன் நாயர் தன் திரைக்கதைகளால் மலையாளிகளின் திரைப்பட ரசனையையே மாற்றியமைத்தவர் என்கிறார்கள்.

நிர்மால்யம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் ஒரு வடக்கன் வீரகதா, கடவு, சதயம், பரிணயம் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதையும் வென்றவர்.

Story image

இந்த நிலையில், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து 8 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். ஆந்தாலஜி கதைகளாக உருவாகியுள்ள இத்தொடருக்கு 'மனோரதங்கள்' எனப் பெயரிட்டுள்ளனர்.

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்.

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்.

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கு, நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். இத்தொடர், வருகிற ஆக.15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.