ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலிவுட் படத்தை இயக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்!

Published On :17 ஜூலை 2024, 1:29 pm IST

இயக்குநர் சிதம்பரம் பாலிவுட் படமொன்றை இயக்க உள்ளார்.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.

இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். தொடர்ந்து, இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக இயக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

தற்போது, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் இயக்கவுள்ள ஹிந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில், நடிகர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.