ஷுப்மன் கில் க்யூட்டாக இருக்கிறார்: மனம் திறந்த பாலிவுட் நடிகை!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுடன் திருமணம் என்ற செய்திக்கு பாலிவுட் நடிகைக்கு பதிலளித்துள்ளார்.
ஷுப்மன் கில், ரிதிமா பண்டிட்
ஷுப்மன் கில், ரிதிமா பண்டிட்
Published on
Updated on
2 min read

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுடன் திருமணம் என்ற செய்திக்கு பாலிவுட் நடிகைக்கு பதிலளித்துள்ளார்.

24 வயதான இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் 25 டெஸ்டில் 1492 ரன்களும் 44 ஒருநாள் போட்டிகளில் 2271 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிசர்வ் வீரராக தேர்வாகினார்.

கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்
கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்

ஷுப்மன் கில் ஜிம்பாம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி தொடரை வென்று அசத்தினார்.

ஷுப்மன் கில், ரிதிமா பண்டிட்
கடின உழைப்பு வீணாகாது..! ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு!
நடிகை ரிதிமா பண்டிட்
நடிகை ரிதிமா பண்டிட்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிக்பாஸ் சீசன் 1 ஒன்றிலும் பங்குபெற்று பிரபலமானவர் பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட். சில இணையத்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே இது குறித்து நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தாலும் மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கனவே ஷுப்மன் கில், சச்சின் மகள் சாராவுடன் காதல் என சமூக வலைதளத்தில் வதந்திகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஷுப்மன் கில், ரிதிமா பண்டிட்
இளவரசி ஸ்மிருதி மந்தனா...! பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஆர்சிபி!

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரிதுமா பண்டிட் இது குறித்து பேசியதாவது:

நாங்கள் டேட்டிங் எதுவும் செய்யவில்லை. முதலில் எனக்கு ஷுப்மன் கில்லை தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் ஒருவேளை அவரை சந்தித்தால் நாங்கள் இது குறித்து பேசி சிரிப்போம். அவர் க்யூட்டாக இருக்கிறார். ஆனால், எங்களுக்குள் எதுவும் இல்லை.

காலையில் இருந்து வாழ்த்து குறுஞ்செய்திகளும் தொலைப்பேசி அழைப்புகளுமாக வந்துகொண்டு உள்ளன. இது முற்றிலும் அபத்தமானது. நான் எதையும் மறைக்க விரும்புவதில்லை. எனது திருமணம் குறித்து நானே அறிவிப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com