
நடிகை ஸ்ரேயா ரெட்டி தன் தந்தையின் நினைவைப் பகிர்ந்துள்ளார்.
’ஏலே இசுக்கு..’ என்றாலே ஸ்ரேயா ரெட்டியின் முகமே நினைவுக்கு வருகிறது. திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஸ்ரேயா ரெட்டிக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இறுதியாக இவர் நடித்த சலார் மற்றும் தலைமைச் செயலகம் தொடரில் இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. எந்த படத்தில் நடித்தாலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
ஒரு நடிகையாக, தன் திறனை வெளிப்படுத்தும் முயற்சிகளிலேயே இருக்கும் ஸ்ரேயா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அப்படத்தில், 1979 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஐயன் போதமை, இந்திய விக்கெட் கீப்பர் பரத் ரெட்டி ரன் அவுட் செய்வார். அதனைப் பார்த்த, கேப்டன் கபில் தேவ் உற்சாகத்தில் குதிப்பார்.
இதில், பரத் ரெட்டியைக் குறிப்பிட்டு “இது என் தந்தை” என ஸ்ரேயா ரெட்டி தன் நினைவைப் பகிர்ந்துள்ளார்.
விக்கெட் கீர்ப்பரான பரத் ரெட்டி 1978 - 1981 வரை 3 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.