தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜோக்கர் - 2 டிரைலர்!

ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவான ஜோக்கர் - 2 படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:22 am

DIN

ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவான ஜோக்கர் - 2 படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.

ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன்.

ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.

மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

தற்போது, அதே கூட்டணியில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இதன் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல ரசிகர்களும் இதற்கு வரவேற்புக் கொடுத்து வருகின்றனர். இப்படம், அக்டோபர் 4 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.