ஆண்குழந்தைக்கு தாயானார் அமலாபால்!

நடிகை அமலாபாலுக்கு கடந்த வாரம் ஆண்குழந்தை பிறந்துள்ளது
ஆண்குழந்தைக்கு தாயானார் அமலாபால்!
Published on
Updated on
1 min read

நடிகை அமலா பாலுக்கு கடந்த வாரம், அதாவது ஜூன் 11ஆம் தேதியில் ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக விடியோ வெளியிட்டு, தெரிவித்துள்ளனர். விடியோவில், அமலா பால் குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைகிறார்; பின்னர் குழந்தையின் புதுவரவினையொட்டி, வீட்டில் விழாக்கோலம் பூண்டிருப்பதைப் பார்த்து, பூரிப்படைகிறார்.

நடிகை அமலா பால் மலையாளத் திரைப்படமான நீலத்தாமரா மூலம் 2009-ல் அறிமுகமானார். பின்னர் தெய்வத் திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், நாயக், வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி 1 & 2, பசங்க 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை, கடாவர் மற்றும் ஆடுஜீவிதம் முதலான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அமலா பால் மற்றும் அவரது காதல் கணவர் ஜகத் தேசாய் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஜகத் தேசாய் கோவாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சொகுசு வில்லாவை மேற்பார்வையிடும் மேலாளராக உள்ளார். ஆரம்பத்தில் ஜகத் மற்றும் அமலா இருவரும் நண்பர்களாக இருந்து, பின்னர் ஒரு காதல் உறவாக மாறினர், அவர்களின் காதலை அழகாக பொதிந்த ஒரு மனதைக் கவரும் திருமணத்தில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அமலா பாலுக்கு இருவீட்டார் முன்னிலையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. வளைகாப்பு விழா புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com