தளபதி விஜய்க்கு பிறந்தநாள் பரிசு!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்காக சிறப்பு விடியோ
`மாஸ்டர்’ பட விஜய்
`மாஸ்டர்’ பட விஜய்
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சிறப்பு விடியோ வெளியிடவுள்ளது.

நாளை ஜூன் 22ஆம் தேதியில் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்று இரவு 7 மணியளவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

மேலும், விஜய்யின் 68-வது படமான ‘கோட்’ படத்தின் 2ஆவது பாடலான `சின்ன சின்ன கண்கள்’ பாடலும் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகுமென `கோட்’ படக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நடிகர் விஜய் நாளை (ஜூன் 22) தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

`மாஸ்டர்’ பட விஜய்
இவர் அணியில் இருக்க இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com