கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அசத்தும் முன்பதிவு.. முதல் நாளில் ரூ.200 கோடியை வசூலிக்கும் கல்கி?

கல்கி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :25 ஜூன் 2024, 10:15 am

DIN

கல்கி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898ஏடி'.

இப்படத்தில் பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இதன் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கிட்டத்தட்ட பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்கள் விற்றுத்தீர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்திலும் பல திரைகளில் மாலைக் காட்சிக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 9 கோடி வரை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால், கல்கி உலகளவில் முதல் நாளில் ரூ.200 கோடி வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.