உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் திட்டம்!

Published On :

கூலி திரைப்படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம்பெற உள்ளதாகத் தகவல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி உள்ளார்.

Story image

நேற்று (ஜூன் 26), கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் தோற்றப் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, முதல்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெறவுள்ள சண்டைக்காட்சிகளைப் பிரம்மாண்டமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஹைதராபாத்தில் செட் அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.