நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

‘கல்கி 2898 ஏடி’ முதல்நாள் வசூல் சாதனை!

கல்கி 2898 ஏடி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

கல்கி 2898 ஏடி போஸ்டர்

Updated On :

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.

பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சலார் ஆதிபுரூஷ் படங்களின் வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல்நாளில் ரூ. 223கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் படங்களில் இதுதான் அதிக வசூலிட்டியதாக உள்ளது. இந்திய அளவில் முதல்நாளில் வசூலில் 3ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.