லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் வெங்கட்பிரபுவிடம், “படம் ரிலீஸுக்கு முன்பு அப்டேட் சொல்லுவது தவறென சொல்லி ஒரு வாரம் ஆகுது டேய் *** அப்டேட் விடு” எனக் கூறியிருந்தார். இதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “சொல்லால்ம்னு நெனைச்சேன்! இப்போ இதுக்கு மேல எப்ப்டினு நீங்களே சொல்லுங்க” எனப் பதிவிட்டுள்ளார். உடன் விஜய்ணாரத்தம் என்ற ஹேஷ்டேக்கினையும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் பலரும் அப்டேட் வேண்டாம்; நீங்கள் படத்தினை ஒழுங்காக எடுத்தால் போதுமெனக் கூறிவருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் தற்குறி? தகாத வார்த்தைகளால் கமெண்ட் செய்தவர்களுக்கு மிஷா கோஷல் பதில்!

சென்னை - 28 மூன்றாம் பாகம் திட்டத்தில் வெங்கட் பிரபு!

”கதவை மூடிவிட்டு பேசலாமா?” முதல்வர் பேச்சுக்கு பதிலளித்த அவைத் தலைவர்!
வெங்கட் பிரபு கதை, யுவன் இசை: ராஜாஸ் ப்ளேலிஸ்ட் பட அறிவிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




