மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒளிப்பதிவாளராக விரும்பும் யாத்ரா?

நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா, ராயன் படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
- DOTCOM
Updated On :3 மார்ச் 2024, 8:39 am

DIN

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Story image

இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் தோற்றப் போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஒளிப்பதிவு துறையில் பணிபுரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யாத்ராவை நடிகராக அறிமுகம் செய்ய தனுஷ் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், யாத்ரா ஒளிப்பதிவில் ஆர்வம் உள்ளவர் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.