மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தொடர்ந்து, சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். சியான் - 62 என தற்காலிகமாக பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இணைந்துள்ளார். சுராஜ், 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் அறிமுகமாகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








