3 மாதங்களில் 4வது நடிகை... சோபியா லியோன் மரணம்!

கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ் (24) கார்ட்டர் (36), ஜெஸ்ஸி ஜேன் (43) இதுவரை உயிரிழந்த நிலையில், தற்போது 4வது நபராக நடிகை சோபி லியோன் மரணம்.
சோபியா லியோன்
சோபியா லியோன்

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை சோபியா லியோன் மரணமடைந்தார். அவருக்கு வயது 26.

ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மரணம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர் நடிகை சோபியா லியோன். 26 வயதான இவர், தனது 18வது வயதில் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

லாஸ் ஏஞ்சலீஸ் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான 101 மாடலிங்இங்க் நிறுவனத்தின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். கடந்த 9 ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக மாறினார் சோபியா லியோன்.

சோபியா லியோன்
சோபியா லியோன்

மெக்ஸிகோ நகரிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 1ஆம் தேதி சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் சோபியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

எனினும், சோபியா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (மார்ச் 9) உயிரிழந்துவிட்டதாக அவரின் வளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ குறிப்பிட்டுள்ளார். கோ ஃபன்ட் மீ என்ற நிதி திரட்டும் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை இன்று அவர் குறிப்பிட்டு அவரின் இறுதி சடங்குகளுக்காக நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

சோபியாவுக்கு நெருக்கமான ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஏஎம்ஏ ஏஜென்ஸியின் (மாடலிங் நடிகைகளுக்கான ஏஜென்ஸி) உரிமையாளர் பிரையன் பெர்க்கும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சோபியா லியோன்
ஈரமான ரோஜாவே நாயகனின் புதிய தொடர்! ஜோடி இவர்தான்!

நடிகை சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே சோபியாவின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ் (24) கார்ட்டர் (36), ஜெஸ்ஸி ஜேன் (43) இதுவரை உயிரிழந்த நிலையில், தற்போது 4வது நபராக நடிகை சோபி லியோன் உயிரிழந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com