நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!

பெங்களூருவில் பிறந்த மதுமிதா, முதன்முதலில் கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் குழுவினரும் நண்பர்களும் இணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், 18 நாளுக்கு முன்பே தனியார் விடுதியில் கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நடிகை மதுமிதா மார்ச் 29ம் தேதி தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதனையொட்டி முன்கூட்டியே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகர்கள் நடிகர்கள் கமலேஷ், விபூ ராமன் மற்றும் நடிகை வைஷ்ணவி ஆகியோர் இணைந்து கேக் வெட்டியுள்ளனர்.

நடிகை மதுமிதா இரவு உணவுக்காக உணவகத்துக்குச் சென்றிந்தபோது, அங்கு வந்த மதுமிதாவின் நண்பர்கள் கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!
தங்கமே, நா பங்காரம்... மீனாட்சி பொண்ணு செளந்தர்யா!
நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!
உண்மைக் காயத்துடன் நடிக்கும் சீரியல் நடிகை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு நம்பர் ஒன் கோடாலு என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்தது.

பெங்களூருவில் பிறந்த இவர், முதன்முதலில் கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com