மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மஞ்ஞுமல் பாய்ஸ் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்தில் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2024, 6:29 am


கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.

இப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கியதுடன் இதுவே அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. மேலும், ரூ.200 கோடி வசூலிக்கவுள்ள முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையயும் மஞ்ஞுமல் பாய்ஸ் அடையவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு மலையாளப் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.