நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் சந்தானம் நடிக்கிறார்.
நடிகை பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சரிகம கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இங்க நான் தான் கிங்கு படத்தின் படத்தின் முதல் பாடலான மாயோனே என்ற பாடல் வெளியாகியுள்ளது. முத்தமிழ் இப்பாடலுக்கு வரிகளை எழுத, ஷான் ரோல்டன் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படம் கோடை வெளியீடாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓ சுகுமாரி படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

கான் சிட்டி படத்தின் புதிய பாடல் வெளியீடு!

ஏஜிஎஸ் உடன் இணைந்த சந்தானம்..! புதிய படம் அறிவிப்பு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




