
இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்களை இயக்கினார்.
ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
இவர் அடுத்ததாக, ஜெயிலர் - 2 படத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “என் 20வது வயதில் மீடியா பொழுதுபோக்கு துறையில் பயணத்தை துவங்கினேன். இத்தனை ஆண்டுகளில் இந்தத் துறையின் பங்களிப்புக்காக நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்துவிட்டேன்.
இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கும் ஆசையும் இருந்தது. இன்று, என் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபிளமண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படத்தை வருகிற மே - 3 ஆம் தேதி அறிவிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.