தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

நளதமயந்தி தொடரிலிருந்து பிரியங்கா நல்காரி நீக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :6 மே 2024, 10:25 am

DIN

'ரோஜா' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர், தொழிலதிபர் ராகுல் வர்மாவை கடந்தாணடு மார்ச் 23 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, பிரியங்கா நல்காரி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சமீபத்தில் நீக்கினார். அதேபோல், அவரது கணவரும் பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் தனது கணவர் ராகுல் வர்மாவுடன் பிறந்த நாளை கொண்டாடியது சமூக வலைதளத்தில் வைரலானது.

சீதாராமன் தொடரிலிருந்து விலகிய அவர், தற்போது நளதமந்தி என்ற புதிய தொடரில் நடித்து வந்த நிலையில், அத்தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இது குறித்து நடிகை பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Story image

அதில், “யாரும் அதிக உற்சாகத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் இத்தொடரிலிருந்து விலகவில்லை, அடுத்த படப்பிடிப்புக்கான நாள்களுக்காக காத்திருந்தபோது இப்படி நடந்துள்ளது. என்னானது, என்ன காரணம் என்று விரைவில் உங்களுக்கு தெரியவரும்”. என்று தெரிவித்துள்ளார்.

நளதமயந்தி தொடரிலிருந்து பிரியங்கா நீக்கப்பட்டுள்ளதால், இவர் நடித்த பாத்திரத்தில் நடிகை ஸ்ரீநிதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநிதி

ஸ்ரீநிதி

நடிகை ஸ்ரீதேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நடித்து பிரபலமானவர். இவர், தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.