மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு உயிரிழந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருதை மே 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்த விருதினை விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் பேசியதாவது:
“விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்ம விருதுகள் வரலாற்றில் அவரது பெயரை சேர்த்துள்ளது அவருக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கிறது.
விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி பல சாதனைகளை செய்து மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த்தை போன்று ஒருவரை பார்க்கவே முடியாது. மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டனின் பெயர் வாழ்க.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஜினி - 173 இயக்குநர் யார்?

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!

ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக! ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


