/

இந்தியன் - 2 அப்டேட்!

இந்தியன் - 2 திரைப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 மே 2024, 6:12 am

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்தியன் - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடலை வருகிற மே.29 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.